/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் சூப்பர் பாஸ்பேட்
/
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் சூப்பர் பாஸ்பேட்
ADDED : ஜூலை 14, 2024 05:09 AM
விருதுநகர் : வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3962 டன், டி.ஏ.பி. 993 டன், பொட்டாஷ் 403 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1909 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.
சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. எண்ணெய் வித்து பயிர்களில் அதிக மகசூல் தருகிறது. மேலும் மண்ணில் டி.ஏ.பி., உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுத்துகிறது. எனவே விவிசாயிகள் டி.ஏ.பி., உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.
101 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் தெரிவிக்கலாம், என்றார்.