/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமணத்திற்கு முன் மகள் கர்ப்பம்: தாய் தற்கொலை
/
திருமணத்திற்கு முன் மகள் கர்ப்பம்: தாய் தற்கொலை
ADDED : ஆக 29, 2024 04:48 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில்திருமணத்திற்கு முன் மகள் கர்ப்பம் ஆனதால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகளும் விஷம் குடித்தார்.
அருப்புக்கோட்டை திருநகரம் அழகாபுரி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி, 46, இவரது மனைவி சாந்தி, 41, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகள் சண்முகபவானி, 18, மதுரையில் கண் மருத்துவமனையில்வேலை செய்து வந்தார். இவருக்கும், பாரப்பத்தியைச் சேர்ந்த ஒருவருக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் காதல் ஏற்பட்டது. ஒரு ஆண்டு பழகிய நிலையில் சண்முக பவானி கர்ப்பம் அடைந்தார்.
இதை அறிந்த தாய் சாந்தி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். இதை பார்த்த சண்முக பவானியும் விஷம் குடித்தார். இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சாந்தி உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முகபவானியிடம் வாக்குமூலம் பெற்றார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

