/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி மருந்துகள் செயலிழக்க வைப்பு
/
குவாரி பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி மருந்துகள் செயலிழக்க வைப்பு
குவாரி பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி மருந்துகள் செயலிழக்க வைப்பு
குவாரி பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி மருந்துகள் செயலிழக்க வைப்பு
ADDED : மே 03, 2024 09:11 PM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆவியூரில் குவாரியில் பாறைகளை தகர்க்க 250க்கும் மேற்பட்ட துளைகள் இட்டு வைக்கப்பட்ட வெடி மருந்துகளை அதிகாரிகள் செயலிழக்க செய்தனர்.
காரியாபட்டி ஆவியூரில் குவாரியில் செயல்பட்டு வந்த வெடி மருந்து கிடங்கில், வெடி விபத்து ஏற்பட்டு, 3 பேர் உடல் சிதறி பலியாகினர். உரிமையாளர் 4 பேர் மீது ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரை கைது செய்தனர். மற்ற இருவர் தலைமறைவாகினர்.
சம்பவத்தை தொடர்ந்து வெடி மருந்து பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இரு நாட்களாக ஈடுபட்டு வந்தனர். நேற்று எஞ்சியிருந்த 2,500 கிலோ வெடி மருந்து பொருட்களை பத்திரமாக மீட்டு, பந்தல்குடியில் ராம்கோ நிறுவனத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
குவாரியில் ஏற்கனவே பாறைகளை தகர்க்க, 250க்கும் மேற்பட்ட துளைகள் இட்டு வெடி மருந்து பொருட்களை செலுத்தி வைத்திருந்ததை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, டி.எஸ்.பி., காயத்ரி முன்னிலையில் செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை, 6:15 மணிக்கு சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு குவாரியில் பணி செய்த நபர்கள் மூலம் அவற்றை வெடிக்க வைத்து, செயலிழக்க செய்தனர். சுற்றியுள்ள கிராமத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.