/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவித்திறன் குறைவுடையோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
/
செவித்திறன் குறைவுடையோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
செவித்திறன் குறைவுடையோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
செவித்திறன் குறைவுடையோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
ADDED : மே 27, 2024 12:28 AM

விருதுநகர்:
விருதுநகரில் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி சுற்றுச் சுவர் சேதம் அடைந்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படவில்லை.
விருதுநகர் சூலக்கரை மேட்டில் செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் இல்லை. இப்பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவர் மிக மோசமான முறையில் சேதம் அடைந்துள்ளது. ஒரு பகுதி முழுவதுமே சரிந்துள்ளது. கிட்டதட்ட ஓராண்டுக்கு முன்பே இந்த சுற்றுச்சுவர் சேதம்அடைந்து விட்டது. ஆனால் தற்போது வரை சரி செய்யவில்லை. பள்ளியின் பின்புறம் இருள் சூழ்ந்த பகுதியே காணப்படுகிறது. குடியிருப்புகள் தள்ளி இருப்பதால் மைதானம் போன்ற இடைவெளி காணப்படுகிறது. சுவர் சேதம் உள்ளதால் விஷப்பூச்சிகள் எளிதில் பள்ளிக்குள் புக வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறையினர் உடனடியாக சேதமடைந்த சுற்றுச்சுவரை சரி செய்ய வேண்டும்.

