/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்களில் காதை செவிடாக்கும் பாட்டு சத்தம்; நோயாளிகள், குழந்தைகள், முதியோர் தவிப்பு
/
பஸ்களில் காதை செவிடாக்கும் பாட்டு சத்தம்; நோயாளிகள், குழந்தைகள், முதியோர் தவிப்பு
பஸ்களில் காதை செவிடாக்கும் பாட்டு சத்தம்; நோயாளிகள், குழந்தைகள், முதியோர் தவிப்பு
பஸ்களில் காதை செவிடாக்கும் பாட்டு சத்தம்; நோயாளிகள், குழந்தைகள், முதியோர் தவிப்பு
ADDED : மார் 08, 2025 06:08 AM

ராஜபாளையம்: மாவட்டத்தில் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலி பரப்புவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தனியார் பஸ்களில் பயணிகள் எதிர்பார்ப்பு என்ற பெயரில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பு செய்வது தொடர்வதால் முதியோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துகழத்துடனான போட்டிகளில் பயணிகளை ஈர்ப்பதற்காக தனியார் பஸ்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதில் சினிமா பாடல்களை தொலைக்காட்சி வழியே ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் அலைபேசி பயன்பாடு தொலைக்காட்சிகளின் உபயோகம் அதிகரித்ததால் இதன் ஆர்வம் குறைந்துள்ளது.
இருப்பினும் பழைய முறையில் தனியார் பஸ்களில் பல்வேறு சமுதாயம் போற்றும் பாடல்கள், பாலுணர்வு துாண்டல், வன்முறையை ஊக்குவிப்பது போன்ற வகையில் பாடல்கள் வரை ஒலிபரப்பி வருவது தொடர்கிறது. இரவு நேரங்களிலும் உணர்ச்சியை துாண்டும் வகையான பாடல்களை போட்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனநிலையை பயணிகளிடையே துாண்டி சிக்கலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இப்பிரச்சனை நீதிமன்ற கவனத்திற்கு சென்றதன் பலனாக அரசு பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் குறித்து கணக்கீடு தொடங்கி அது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு அரசு பஸ்களில் தற்போது இப்பிரச்சினை குறைந்துள்ளது.
தனியார் பஸ்கள் பழைய படி அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி முதியோர், பெண்கள், குழந்தைகளின் பயணத்தை சீர் குலைக்கும் வகையில் சிக்கல் தொடர்வதுடன், அவசர தொடர்புக்கு வழியற்ற வகையில் அதீத சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப் படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விதிமீறல் அதிகரிப்பதை வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.