/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் சந்திப்பு நிறுத்தம் இல்லாமல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
/
விருதுநகர் சந்திப்பு நிறுத்தம் இல்லாமல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
விருதுநகர் சந்திப்பு நிறுத்தம் இல்லாமல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
விருதுநகர் சந்திப்பு நிறுத்தம் இல்லாமல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
ADDED : ஜூலை 04, 2024 12:58 AM
விருதுநகர்: சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் ஜூலை 11 முதல் இயக்கப்படவுள்ளது. வாரத்தில்4 நாட்கள் செல்லும் இந்த இதனால் விருதுநகர் சந்திப்பில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் ஜூலை 11 முதல் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு கிளம்பி மதியம் 1:50க்கு சென்றடையும், மறு மார்க்கமாக இரவு 11:00 நாகர் கோவிலிலிருந்து கிளம்பி மதியம் 2:20க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு செல்கிறது. இந்த ரயில் விருதுநகர் சந்திப்பில் நின்று செல்லாமல் இயக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இந்த ரயிலில் பயணிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள்மதுரையில் இறங்கி அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று முன்பும் வந்தே பாரத் ரயில் முதலில் விருதுநகரில் நின்று செல்லாமல் இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நின்று செல்கிறது.
இந்நிலையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் என அறிவிப்பு வெளியிட்டு விருதுநகர் நிறுத்தத்தை கோவில்பட்டிக்கு மாற்றியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மாவட்ட மக்கள்நலன் கருதி விருதுநகர் சந்திப்பில் சிறப்பு வந்தே பாரத் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.