/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரிகள் வசதிக்காக பயணிகள் நிழற்குடை இடிப்பு
/
குவாரிகள் வசதிக்காக பயணிகள் நிழற்குடை இடிப்பு
ADDED : மார் 03, 2025 07:07 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே கரிசல்குளம் சந்திப்பில் இருந்த பயணிகள் நிழற்குடையை குவாரிகளுக்கு லாரி செல்வதற்காக இடிக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து எம்.ரெட்டியபட்டி ரோடு செல்லும் வழியில் கரிசல்குளம் உள்ளது. இங்கு ரோடு அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இங்கிருந்து எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும்.
மெயின் ரோட்டில் இருந்து குவாரிகளுக்கு பிரிந்து செல்லும் ரோட்டில் பஸ் ஸ்டாப் இருந்தது. லாரிகள் செல்ல இடையூறாக இருப்பதால் பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டனர். இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குவாரிக்காரர்களின் நலனில் அக்கறை காட்டும் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்த இடத்தின் அருகிலேயே மக்கள் நலன் கருதி மற்றொரு நிழற்குடை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கஅறிவுறுத்த வேண்டும்.