நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டக்கிளை சார்பில் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்முன்பு, பழைய பென்ஷன்திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசுத்துறை நிர்வாகிகளான குருசாமி, முருகன் செந்தில்வேல், ராஜகுரு, தேவராஜ் உட்பட பலர் பேசினர். சாலை பணியாளர் சங்க நிர்வாகி திருப்பதி ராஜ் நன்றி கூறினார்.