நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, கரூர் முதன்மை மாவட்ட நீதிபதிகளை கண்டித்து, நேற்று மாலை 6:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சவுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் சங்க நிர்வாகிகள், திரளான நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

