நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவ அலுவலர் லஜா ஜெசிகாவின் ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்று மாலை பொது சுகாதாரத் துறை ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாநில செயலாளர் காதர் உசேன், அரசு ஊழியர்கள் சங்க தலைவர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.