
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் முன்பு சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை உதவி கோட்டச் செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கிளை தலைவர் கணேஷ், கிளை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அவுட்சோர்சிங் ஆட் குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். லட்சக்கணக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

