ADDED : ஜூன் 22, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை அறிவித்த ஜன. மாதம் முதலே அமல்படுத்த வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மங்காள், குருநாதன், அங்கம்மாள், செல்லப்பாண்டியன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநிலத்துணை தலைவர் ராமசுப்புராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் பேசினர்.
