ADDED : ஜூலை 20, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூலை 21 -
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் 500மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ம.நீ., மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட வி.சி.க., தி.க., தலித் விடுதலை இயக்கம், ஆம் ஆத்மி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
