ADDED : ஆக 03, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் காட்டு நாயக்கன் சமூக மக்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலாளர் பெனரி தலைமை வகித்தார். பழங்குடி தலைவர் ஜெகநாதன், மார்க்சிஸ்ட் கிளைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் விஜயமுருகன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் பேசினர்.