/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடர்ந்த முட்புதர்கள், மடைகள் சேதம் சின்ன பேராலி கண்மாய் பாசன விவசாயிகள் பரிதவிப்பு
/
அடர்ந்த முட்புதர்கள், மடைகள் சேதம் சின்ன பேராலி கண்மாய் பாசன விவசாயிகள் பரிதவிப்பு
அடர்ந்த முட்புதர்கள், மடைகள் சேதம் சின்ன பேராலி கண்மாய் பாசன விவசாயிகள் பரிதவிப்பு
அடர்ந்த முட்புதர்கள், மடைகள் சேதம் சின்ன பேராலி கண்மாய் பாசன விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 27, 2024 05:52 AM

விருதுநகர் : கண்மாய் துார்வாரி 10 ஆண்டுகளுக்கும் மேலாவதால் கரைகள், மடைகள் சேதமாகி நீர் இருப்பு வைக்க முடிவதில்லை, நீர்வரத்து ஓடைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கண்மாயில் முட்புதர்கள் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக விருதுநகர் சின்ன பேராலி விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
விருதுநகர் அருகே சின்ன பேராலியில் ஊராட்சிக்கு சொந்தமான கண்மாய், 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் விவசாயம் நடந்து வந்தது. இந்த கண்மாய்க்கு செவல் ஓடை, வகுத்தோடையில் இருந்து தண்ணீர் வருகிறது. இக்கண்மாய் துார்வாரி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இதனால் கரைகள் ஆங்காங்கே உடையும் நிலையில் உள்ளது. இந்த கரை வழியாக தான் வெயில் உகந்த அம்மன் கோவில் திருவிழாக்களுக்கு இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். கரை சேதத்தால் கோயிலுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடைகள் முழுவதும் மண்ணை கொட்டி ஆக்கிரமித்துள்ளதால் வரும் நீரின் அளவு குறைந்துவிட்டது. டிச. 18, 19 தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிறைந்த நிலையில் இந்த கண்மாய் நிரம்பவில்லை.
கண்மாயில் முட்புதர்கள் வளர்ந்து நிறைந்து காடு போல உள்ளதால் வரும் நீரை இவையே உறிஞ்சி விடுகின்றன. மடைகள் அனைத்தும் சேதமாகி உள்ளதால் நீர் வந்தாலும் உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கிணறு வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சின்ன பேராலி கண்மாய் கரைகள், மடைகளை சீரமைத்து, முட்புதர்கள், நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்தால் விவசாயம் செய்ய இப்பகுதி விவசாயிகள் தயாராக உள்ளனர்.