/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் சேதமான மிளகாய் நிவாரணம் கிடைக்காததால் தவிப்பு
/
மழையால் சேதமான மிளகாய் நிவாரணம் கிடைக்காததால் தவிப்பு
மழையால் சேதமான மிளகாய் நிவாரணம் கிடைக்காததால் தவிப்பு
மழையால் சேதமான மிளகாய் நிவாரணம் கிடைக்காததால் தவிப்பு
ADDED : மார் 10, 2025 04:33 AM

திருச்சுழி,: திருச்சுழி பகுதிகளில் மழையால் சேதமான மிளகாய் பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்காததாலும், தற்போது விளைச்சலும் அதிகளவு இல்லாததாலும் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம்,கரிசல்குளம், ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மிளகாய், மக்காச்சோளம், பருத்தி விளைவிக்கப்பட்டு இருந்தன. இதில் அதிக அளவு மிளகாய் பயிரிடப்பட்டுஉள்ளது. டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையில் நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள்அழுகி விட்டன. இதில் மிளகாய் பயிர் கடுமையான பாதிப்பை அடைந்தது.
நல்ல விளைச்சல் காலங்களில் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 குவிண்டால் மிளகாய் கிடைக்கும். பயிர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 5 குவிண்டால் கூட கிடைப்பது இல்லை. பல விவசாயிகளுக்கு மிளகாய் சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மிளகாய் விவசாயிகள் : ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லை. காலநிலை மாற்றத்தாலும், தொடர் மழை பெய்த காரணத்தினாலும் நிலத்தில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி விட்டன. அரசு மிளகாய் பயிருக்கு நிவாரணம் கிடைக்கும் என அறிவித்தது. ஆனால் இதுவரை எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.