/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த வெளியில் பலகாரங்கள் அபராதம் விதித்தாலும் அலட்சியம்
/
திறந்த வெளியில் பலகாரங்கள் அபராதம் விதித்தாலும் அலட்சியம்
திறந்த வெளியில் பலகாரங்கள் அபராதம் விதித்தாலும் அலட்சியம்
திறந்த வெளியில் பலகாரங்கள் அபராதம் விதித்தாலும் அலட்சியம்
ADDED : ஜூன் 27, 2024 05:35 AM

அருப்புக்கோட்டை : அருப்புக் கோட்டையில் உள்ள ஸ்வீட் கடைகளில் திறந்த வெளியில் வைத்து பலகாரங்களை விற்பதால் தூசி பட்டு சுகாதார கேடு ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை நகரில் ஏராளமான சுவீட் கடைகள் உள்ளன. இவற்றில் சேவு, மிக்சர், லட்டு, பூந்தி உட்பட பல வகையான தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் திறந்த வெளியில் பாதுகாப்பாக மூடி வைக்காமல் இனிப்புகள் விற்கப்படுகின்றன. காசுக்கடை பஜார், திருச்சுழி ரோடு, மதுரை ரோடு உட்பட பகுதிகளில் உள்ள பலகார கடைகளில் திறந்த வெளியில் தான் விற்கப்படுகின்றன. உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை செய்து அபராதம் விதித்தாலும் அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் திறந்தவெளியில் தான் விற்கின்றனர்.
மதுரை ரோடு, காசு கடை பஜார் பகுதி வழியாகத்தான் தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள், பஸ்கள் செல்கின்றன. இவை கிளப்பும் தூசிகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள பலகாரங்களின் ஒட்டுகின்றன. இதை வாங்கிச் செல்பவர்களுக்கு வயிற்றுக் கோளாறு உட்பட உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
திறந்தவெளியில் விற்கப்படும் பலகார கடைகளை ஆய்வு செய்து அபராதம் விதித்தும் மற்றும் கடும் நடவடிக்கையையும் உணவு பாதுகாப்பு அலுவலர் எடுக்க வேண்டும். நகராட்சி சுகாதார பிரிவினரும் இது போன்ற கடைகளை ஆய்வு செய்து, சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் பலகாரங்களை விற்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.