/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெடிக்க வைத்து அழிக்கப்பட்ட டெட்டனேட்டர்கள்
/
வெடிக்க வைத்து அழிக்கப்பட்ட டெட்டனேட்டர்கள்
ADDED : ஜூலை 31, 2024 06:21 AM
சிவகாசி : சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் பேக்டரியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டதில் 20 கி.மீ., சுற்றளவிற்கு சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் பேக்டரி உள்ளது.
இங்கு சிமெண்ட் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் கல்குவாரி மட்டும் ஐந்து ஆண்டுக்கு மேலாக மட்டும் செயல்படவில்லை. கல்குவாரியில் வெடிவைத்து தகப்பதற்காக டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் ஏராளமாக இருப்பு இருந்தது.
இதனை சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8:30 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சத்தம் ஆலங்குளத்தை சுற்றிலும் 20 கி.மீ., சுற்றளவிற்கு கேட்டது. இது குறித்த தகவல் மக்களுக்கு தெரியாததால் பட்டாசு ஆலையில்தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் தெரிந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் இதுகுறித்து விசாரித்தனர். தொடர்ந்து கல்குவாரியில் வெடிகள் அழிக்கப்பட்டது தெரிந்து நிம்மதி அடைந்தனர்.

