/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

ADDED : மே 19, 2024 02:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மே 20 முதல் 23 வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை (மே 20) முதல் மே 25 வரை மழையைப்பொறுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலையியல் துறை அறிவித்துள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் மே 20 முதல் 23 வரை மூடப்படும் என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.