ADDED : செப் 02, 2024 03:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிவராத்திரி நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பின் காலை 6:30 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
மதியம் 12:00 மணி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதிகாலையில் மலையில் பெய்த லேசான சாரலும், குளிர்ந்த சூழலும் பக்தர்களுக்கு சிரமம் இல்லாத நிலையை ஏற்படுத்தியது.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிவராத்திரி வழிபாடு சிறப்பு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர்.