/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு உயர்த்தப்பட்டதால் சிரமம், தேங்கும் கழிவு நீர் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டு மக்கள் அவதி
/
ரோடு உயர்த்தப்பட்டதால் சிரமம், தேங்கும் கழிவு நீர் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டு மக்கள் அவதி
ரோடு உயர்த்தப்பட்டதால் சிரமம், தேங்கும் கழிவு நீர் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டு மக்கள் அவதி
ரோடு உயர்த்தப்பட்டதால் சிரமம், தேங்கும் கழிவு நீர் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டு மக்கள் அவதி
ADDED : மே 30, 2024 02:00 AM

ராஜபாளையம்: சேதமடைந்த வாறுகால், துார்வாரப்படாத ஓடை, தேங்கும் கழிவுநீர் என பல்வேறு குறைகளுடன் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த வார்டில் சக்கராஜா கோட்டை, முதனுார் தெரு, பொன்னுரங்க மூப்பனார் தெரு உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தென்காசி மெயின் ரோடு, சங்கரன்கோவில் முக்கு, அம்பலப்புலி பஜார் ஒட்டிய தெருக்கள் உள்ள இப்பகுதியில் வணிகப் பகுதிகள் ஒட்டி உள்ளதால் குடியிருப்பு அருகே வாறுகால்கள் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் தெருவிற்கு கழிவுநீர் வருகிறது.
மெயின் ரோடுகளில் பிரதான ஓடை மண் மேவி உள்ளது. ஆங்காங்கே சுற்றித் திரியும் நாய்களால் அச்சம் உள்ளது. ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் செயல்படுவதுடன் மழை வெயிலுக்கு ஒதுங்க முடியாத நிலை உள்ளது.
ஆண்டு கணக்கில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் இணைப்பு பணிகளால் தெருக்கள் மேடு பள்ளமாகி உள்ளன. தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் ஆங்காங்கே விடுபட்டுள்ளது. முழுமையாக கணக்கிட்டு செயல்படுத்த வேண்டும்.
ரோட்டை தோண்டாமல் அதன் மேலேயே போட்டு வைத்துள்ளனர். தாழ்வான வீடுகளுக்குள் மழை நேரங்களில் கழிவு நீர் புகுந்து குடிநீர் தொட்டியில் கலக்கும் சூழல் ஏற்படுகிறது. பழைய ரோட்டின் அளவை உயர்த்தாமல் போட வேண்டும் என்ற அறிவிப்பு பின்பற்றவில்லை.
- ராமராஜ், குடியிருப்பாளர்.
மேம்பாட்டுப் பணிகளுக்காக தோண்டி வைத்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. மேடு பள்ளங்கள் இடையே தடுமாறி சென்று வருகிறோம். கை கால் முறிவு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்தும் புதிய ரோடு பணிகள் தொடங்குவதாக இல்லை.
- நீல பாக்கியம், குடும்பத்தலைவி.
மலையடிப்பட்டியில் இருந்து இவ்வழியே வரும் பிரதான ஓடை நீண்ட காலமாக துார் வாராமல் வைத்துள்ளனர். அவற்றில் குப்பைகள் போட்டும் மரமாக புதர்கள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதை துார்வார வேண்டும்.
- ஆனந்த லட்சுமி, குடும்பத்தலைவி.
குடியிருப்புக்கு ஏற்ப அகலமான வாறுகால் அமைக்கவில்லை. தேங்கும் கழிவுகளையும் தகுந்த இடைவெளிகளில் அகற்றுவதில்லை. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. சிறு குழந்தைகளை வைத்து சங்கடத்தில் உள்ளோம்.
- ரேணுகா, குடும்பத்தலைவி.
விடுபட்ட பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் குழாய்கள் முழுமையாக இணைப்பு கொடுத்த பின் ரோடு போட கூறியதால் தாமதம் ஏற்படுகிறது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் பார்த்து வருகிறோம். ஓடையை துார்வார நிதி ஒதுக்க கேட்டுள்ளோம். குறைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கீதா, கவுன்சிலர்.