/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வடிதட்டு கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வடிதட்டு கண்டெடுப்பு
ADDED : ஆக 07, 2024 11:10 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன வடிதட்டு கண்டெடுக்கப்பட்டது.
விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி என 1150 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
புதிதாக தோண்டப்பட்ட குழியில் உடைந்த நிலையில் சுடு மண்ணால் ஆன இலை அமைப்பிலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முன்னோர்கள் இங்கு சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்துள்ள வடிதட்டில் பெரிய துளைகள் உள்ளன. இது சங்கு வளையல்கள் உள்ளிட்ட வியாபார பொருட்களை தனித்தனியாக பிரித்து வடிகட்டுவதற்கு பயன்பட்டுள்ளது, என்றார்.