/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் காளை கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் காளை கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் காளை கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் காளை கண்டெடுப்பு
ADDED : ஆக 24, 2024 01:24 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என, 1,550க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறியதாவது:
அகழ்வாய்வில் முன்னோர்கள் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான சான்றும், பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்றும் கிடைத்து வருகின்றன. சுடு மண்ணால் ஆன காளையின் உருவம் கிடைத்ததன் மூலம், அந்த காலத்திலேயே வீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.