/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநுால் வினியோகம் துவக்கம்
/
அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநுால் வினியோகம் துவக்கம்
அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநுால் வினியோகம் துவக்கம்
அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநுால் வினியோகம் துவக்கம்
ADDED : மே 31, 2024 06:51 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பயிலும் அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 26 ஆயிரத்து 154 மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் வினியோகம் நடந்து வருகிறது.
மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் 13 ஆயிரத்து 386 மாணவர்கள், 2ம் வகுப்பில் 14 ஆயிரத்து 682 மாணவர்கள், 3ம் வகுப்பில் 15 ஆயிரத்து 841, 4ம் வகுப்பில் 16 ஆயிரத்து 255, 5ம் வகுப்பில் 17 ஆயிரத்து 589, 6ம் வகுப்பில் 21 ஆயிரத்து 297, 7ம் வகுப்பில் 22 ஆயிரத்து 470, 8ம் வகுப்பில் 22 ஆயிரத்து 593 மாணவர்கள், 9ம் வகுப்பில் 23 ஆயிரத்து 039 மாணவர்கள், 10ம் வகுப்பில் 21 ஆயிரத்து 231, ப்ளஸ் 1 வகுப்பில் 19 ஆயிரத்து 350, ப்ளஸ் 2 வகுப்பில் 18 ஆயிரத்து 434 மாணவர்கள் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 154 மாணவர்கள் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இவர்களுக்கான பாடநுால்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மேல்நிலை மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல், செவிலியியல், இயந்திரவியல், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட இலவச புத்தகங்கள் மே 24 முதல் விருதுநகர் கல்வி மாவட்டத்திற்கு சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், சிவகாசி கல்வி மாவட்டத்திற்கு அண்ணாமலையம்மாள் நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கும் வரப்பெற்றன.
இவை மே 27 முதல் அரசு பள்ளிகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
அடுத்த வாரம் உதவி பெறும் பள்ளிகளுக்கு வினியோகிக்க உள்ளனர். சாத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் என வட்டாரம் வாரியாக அழைப்பு விடுக்கப்பட்டு ஒவ்வொரு அந்தந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் புத்தகங்களை பெற்று செல்கின்றனர்.