/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனிமவளக்கொள்ளை விவகாரத்தில் வருவாய் துறையினருக்கு குற்றக்குறிப்பாணை வழங்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

ADDED : மார் 02, 2025 06:06 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கனிமவளக்கொள்ளை விவகாரத்தில் வருவாய்த்துறையினர் 4 பேரின் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு 17 (அ)' பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் 500 கியூபிக் மீட்டர் வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் 5000 கியூபிக் மீட்டர் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சாத்துார் தாசில்தார் ராமநாதன் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு விடுவிக்கப்பட்டார். நீர்வளத்துறை உதவி பொறியாளர் அனிதாவின் சஸ்பெண்ட் குறித்து கலெக்டரின் பரிந்துரையில் மதுரை தலைமை பொறியாளர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் வருவாய்த்துறையினர் 5 பேர் மட்டுமே சஸ்பெண்ட் ஆனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 வருவாய்துறையினர், பரிந்துரைக்கப்பட்ட வேளாண், நீர்வளத்துறையை சேர்ந்த இருவர் ஆகியோரிடம் சிறப்பு விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., ஆனந்தி விசாரித்தார். இதுகுறித்து அறிக்கை கலெக்டர் ஜெயசீலனிடம் சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ., அஜிதா, கிராம உதவியாளர் குருசாமி ஆகிய 4 பேரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு 17 (அ)' பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கி விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாசில்தார் ராமநாதன் மீதான சஸ்பெண்ட் தொடர்கிறது.