ADDED : செப் 01, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் இ.கம்யூ., மாவட்ட குழு கூட்டம் உறுப்பினர்கள் விஜயன், மகாலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்.பி.,க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமசாமி, பொன்னுப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையில் நரம்பில் வால்வுகள் செலுத்த உரிய டாக்டர்கள், மூச்சுத் திணறல் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு போதிய வென்டிலேட்டர்கள் இல்லாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்னைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.