/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீபாவளி பட்டாசு விற்பனை ஆடிப்பெருக்கில் துவங்கியது
/
தீபாவளி பட்டாசு விற்பனை ஆடிப்பெருக்கில் துவங்கியது
தீபாவளி பட்டாசு விற்பனை ஆடிப்பெருக்கில் துவங்கியது
தீபாவளி பட்டாசு விற்பனை ஆடிப்பெருக்கில் துவங்கியது
ADDED : ஆக 03, 2024 08:12 PM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பூஜை நடத்தி, இந்தாண்டுக்கான தீபாவளி சிறப்பு பண்டிகை விற்பனை துவங்கப்பட்டது.
சிவகாசி, சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் 2,000த்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆடி பெருக்கு நாளன்று வியாபாரிகள் துவக்குவது வழக்கம்.
அதன்படி நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்டாசு கடைகளில் சிறப்பு பூஜை நடத்தி விற்பனையை துவக்கினர். புதிதாக உரிமம் பெற்ற பட்டாசு கடைகளும் பூஜை போட்டு விற்பனையை துவக்கின.
சிவகாசியில் உள்ள கடைகளில் ஆலைகளில் இருந்து நேரடியாக பட்டாசு வாங்கி விற்பனை செய்யபடுவதால் விலை குறைவாக தரப்படும். இங்கு 10 முதல் 90 சதவீதம் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்கப்படுவதால் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பட்டாசு வாங்கி செல்வர்.
இந்தாண்டு வழக்கம் போல் வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரத்தை துவக்கியுள்ளனர்.