/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தே.மு.தி.க., வேட்பாளர் சகோதரர் ஓட்டு சேகரிப்பு
/
தே.மு.தி.க., வேட்பாளர் சகோதரர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2024 04:51 AM
விருதுநகர்: விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனின் சகோதரர் சண்முக பாண்டியன் ஓட்டு சேகரித்தார்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் மெயின் பஜார், தெப்பம், மேலத்தெரு, ஏ.டி.பி., காம்பவுண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தன் தந்தையின் மறு உருவமாக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ள விஜய பிரபாகரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவார், என்றார்.
பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி ஒன்றில் வியாபாரம் செய்தார். டீ போட்டு கொடுத்தார். பின் மக்களிடம் ஓட்டு சேகரித்த போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மேலும் பஸ்சில் ஏறி பயணிகளிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது பெண் ஒருவர் அவரை கன்னத்தை பிடித்து கொஞ்சினார். கட்டி அணைத்தார்.

