/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'பிறரை குறை சொல்லி தங்கள் தவறை மறைக்கும் தி.மு.க.,'
/
'பிறரை குறை சொல்லி தங்கள் தவறை மறைக்கும் தி.மு.க.,'
'பிறரை குறை சொல்லி தங்கள் தவறை மறைக்கும் தி.மு.க.,'
'பிறரை குறை சொல்லி தங்கள் தவறை மறைக்கும் தி.மு.க.,'
ADDED : ஏப் 17, 2024 06:09 AM
ராஜபாளையம், : பிறரை குறை சொல்லி தங்கள் தவறை மறைக்க நினைக்கும் தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில், தி.மு.க.,ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கொண்டு வரப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் வந்துள்ளது. தி.மு.க.,விற்கு இன்னும் ஒரே ஒரு தீபாவளி தான் காத்துக் கொண்டிருக்கிறது.
மினி கிளினிக், லேப்டாப், திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. கேட்டால் டில்லியில் இருந்து பணம் வரவில்லை என்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் ஜெ., பழனிசாமி அவ்வாறு சொல்லவில்லை. தமிழக வருவாயை கொண்டு ஆட்சி நடத்தினர். எதற்கெடுத்தாலும் டில்லியை குறை சொன்னால் இங்கு ஆட்சி எதற்கு.
அ.தி.மு.க., ஆட்சியில் பாதிப்பு ஏற்படுத்திய கஜா புயல், சென்னை வெள்ளத்திலிருந்து பழனிசாமி மக்களை பாதுகாத்தார். பிறரை சொல்லி தங்கள் தவறை மறைக்க நினைக்கும் தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்., என்றார்.

