/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., எம்.பி.,க்களை தேட வேண்டி உள்ளது
/
தி.மு.க., எம்.பி.,க்களை தேட வேண்டி உள்ளது
ADDED : மார் 26, 2024 06:15 AM
ராஜபாளையம் : தென்காசி உட்பட பல தொகுதிகளில் தி.மு.க., எம்.பி.,க்களை தேட வேண்டிய நிலை இருக்கிறது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ராஜபாளையத்தில் கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு தமிழகம் எங்கும் வரவேற்பு உள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன் தி.மு.க., கூட்டணி சார்பில் சென்ற ஒரு எம்.பி., கூட தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்காததுடன், தொகுதி பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசாததால் அவர்களால் எவ்வித நன்மையும் இல்லை.
தென்காசி உட்பட தொகுதி எம்.பி.,க்கள் எங்கே என்று தேட வேண்டிய நிலை உள்ளது.
தி.மு.க., கூட்டணி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்ததும் ஒன்றும் நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் உறுதியற்ற வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க.,வின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு இருக்கிறது.
தென்காசி தொகுதி பல வருடங்களாக தொழில், வேளாண்மை, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வித முன்னேற்றம் இல்லாமல் உள்ள தொகுதிகளுக்கு நாங்கள் வெற்றி பெறுவதன் மூலம் மக்களுக்கான வெளிச்சத்தை உருவாக்க முடியும.
நான்கு முனை, மூன்று முனை, இரண்டு முனை போட்டியாக இருந்தாலும் அ.தி.மு.க., கூட்டணிக்கு தான் சாதகம் என்றார்.

