/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மொழிக் கொள்கையில் தி.மு.க., அரசியல் செய்கிறது
/
மொழிக் கொள்கையில் தி.மு.க., அரசியல் செய்கிறது
ADDED : பிப் 22, 2025 07:00 AM
சாத்துார்: மொழிக்கொள்கையில் தி.மு.க., அரசியல் செய்கிறது, என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சாத்துார் ஓ.மேட்டுப் பட்டியில் அ.தி.மு.க..முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அ.தி.மு.க எப்போதும் இரு மொழிக் கொள்கை தான் ஆதரிக்கும். தி.மு.க தலைவர்களை இழிவுபடுத்தும் அரசியலை செய்து வருகிறது. முன்பு இந்திரா தமிழகம் வந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டி வன்முறை சம்பவங்கள் அரங்கேறின .காங்கிரஸ் அவர்களுடன் கூட்டணியில் உள்ளது.
தற்போது' கெட் அவுட் மோடி' என்று ஹேஷ் டாக் பதிவிட்டதால் 'கெட் அவுட் ஸ்டாலின் 'ஹேஷ் டாக்' பரவி எதிர் வினையை சந்தித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கொள்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாம் மொழி கற்க முடியாமல் வஞ்சிக்கப்படுவதாக கூறியதற்கு ஆளும் கட்சியினர் தான் பதில் அளிக்க வேண்டும்.
மொழிக் கொள்கையில் தி.மு.க., அரசியல் செய்கிறது.
தமிழகத்தில் 39 எம்.பி., சீட்டுகளை வென்று எடுத்த தி.மு.க. டெல்லி பார்லிமென்டில் போராடி வாதாடி நிதியை பெற வேண்டும்.
இல்லாவிட்டால் 39 பேரும் பதவி விலக வேண்டும். புகழேந்தி தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை.
அவர் தற்போது கட்சியிலும் கிடையாது. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்றார்.

