/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மறுக்கின்றனரா * ஒழுகும் பள்ளி சேதத்திற்கு களத்திற்கு வர ஊரகத்துறையினர் * கோரிக்கைக்கு பலனில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
/
மறுக்கின்றனரா * ஒழுகும் பள்ளி சேதத்திற்கு களத்திற்கு வர ஊரகத்துறையினர் * கோரிக்கைக்கு பலனில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
மறுக்கின்றனரா * ஒழுகும் பள்ளி சேதத்திற்கு களத்திற்கு வர ஊரகத்துறையினர் * கோரிக்கைக்கு பலனில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
மறுக்கின்றனரா * ஒழுகும் பள்ளி சேதத்திற்கு களத்திற்கு வர ஊரகத்துறையினர் * கோரிக்கைக்கு பலனில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : ஆக 14, 2024 12:33 AM
விருதுநகர் : மழை நேரங்களில் ஒழுகும் பள்ளி கட்டடங்களின் சேதம் தொடர்பான தலைமை ஆசிரியர்களின் புகார்களுக்கு பி.டி.ஓ., உள்ளிட்ட ஊரகத்துறை அலுவலர்கள் களத்திற்கு வர மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் சரி செய்வதில் ஊரக பள்ளிகளில் தாமதம் நீடிப்பதால் அதுவரை மாணவர்கள் மரத்தடியில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் 643, உதவி பெறும் பள்ளிகள் 343, தனியார் பள்ளிகள் 104 என 1090 துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 228, உயர்நிலைப்பள்ளிகள் 150, மேல்நிலைப்பள்ளிகள் 246 என 1714 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டட சேதம் உள்ளிட்ட பணிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் தான் பார்வையிடுகின்றன. திட்ட வரைவு அனுப்பப்பட்டு சுற்று சுவர், புதிய வகுப்பறை கட்டடம், சத்துணவு கட்டடம் போன்றவற்றை ஊரக வளர்ச்சி முகமை வளர்ச்சி நிதி ஒதுக்கி கட்டுகிறது. ஏற்கனவே இத்துறை அலுவலர்கள் பல்வேறு பணிச்சுமையில் தவித்து வருகின்றனர். கூடுதல் பணியிடம் கோரியும் தற்போது வரை தமிழக அரசு செவி சாய்க்காமல் உள்ளது.
இந்நிலையில் ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்களிடம் பள்ளியில் மழைநீர் ஒழுகுவது, கட்டட சேதம் பற்றி தலைமை ஆசிரியர்கள் புகார் அளித்தால் அவர்கள் நேரில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதே போல் இதை அடுத்தடுத்து பின்பற்ற வேண்டிய வட்டார கல்வி அலுவலர்களும் பெயருக்கு பி.டி.ஓ.,விடம் அறிக்கையை அனுப்பி விட்டு இருந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் பள்ளி கட்டடங்கள் ஒழுகுவதை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் பள்ளி மரத்தடியிலும், அரை நாள் விடுமுறையிலும் நாட்களை கடத்துகின்றனர். ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி சில பள்ளிகளில் கட்டடங்கள் ஒழுகுகிறது. மாணவர்கள் மரத்தடியில் தவிக்கின்றனர். பெற்றோரும் அச்சத்துடனே பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
விரைவில் வடகிழக்கு பருவமழையும் துவங்க உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி சேதம் தொடர்பான புகார்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் பி.டி.ஓ.,க்களை முழுவீச்சில் கள ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும். அதே போல் வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து பி.டி.ஓ.,க்களிடம் வலியுறுத்தி போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.