/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாய் தொல்லை, போக்குவரத்துக்கு நெருக்கடி
/
நாய் தொல்லை, போக்குவரத்துக்கு நெருக்கடி
ADDED : ஆக 18, 2024 04:01 AM

காரியாபட்டி, : நாய்கள் தொல்லை,பஜாரில் இரு வாகனங்கள் விலக முடியாமல் போக்குவரத்து நெருக்கடி இருப்பது, ரேஷன் கடையில் திறந்த வெளியில் பொருட்கள் வாங்க காத்திருப்பது உள்ளிட்டவைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க, பல்வேறு தேவைகளுக்கு ஏராளமானோர் வருகின்றனர். விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நூற்றுக் கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பஜாரில் இட நெருக்கடியால் இரு வாகனங்கள் விலக முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
முடியனுார் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க திறந்தவெளியில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மழை வெயிலுக்கு கால்கடுக்க நிற்க வேண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான வீதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதில் சேதம் அடைந்துள்ளது.

