/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருவில் நாய்கள்; பஜாரில் மாடுகள் நடமாட்டத்தால் ஸ்ரீவி., மக்கள் அச்சம்
/
தெருவில் நாய்கள்; பஜாரில் மாடுகள் நடமாட்டத்தால் ஸ்ரீவி., மக்கள் அச்சம்
தெருவில் நாய்கள்; பஜாரில் மாடுகள் நடமாட்டத்தால் ஸ்ரீவி., மக்கள் அச்சம்
தெருவில் நாய்கள்; பஜாரில் மாடுகள் நடமாட்டத்தால் ஸ்ரீவி., மக்கள் அச்சம்
ADDED : மே 24, 2024 01:57 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும்பாலான தெருக்களில் நாய்கள் தொல்லையும், பஜார் வீதிகளில் மாடுகள் நடமாட்டமும் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நகரின் ஒவ்வொரு தெருவிலும் ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
இரவு 11:00 மணிக்கு மேல் வெளியூர் சென்று திரும்பும் மக்களையும், வேலைகளுக்கு சென்று திரும்பும் மில் தொழிலாளர்களையும், அதிகாலை நேரத்தில் பால், பேப்பர் சப்ளையில் ஈடுபடுபவர்களையும் துரத்தும் நாய்கள் கூட்டத்தால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நகரில் மாடு வளர்க்கும் பெரும்பாலானோர் காலை 7:00 மணிக்கு மேல் தங்கள் மாடுகளை அவிழ்த்து விட்டு பஜார் வீதியில் சுற்றி திரிய விடுகின்றனர்.
இதுவரை போக்குவரத்து நெருக்கடி இல்லாத ரோடுகளில் மட்டுமே சுற்றித்திரிந்த மாடுகள், தற்போது பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட், நகைக்கடை, பெரிய கடை பஜார், என அதிகளவில் மக்கள் நடமாட்டமுள்ள வீதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து செல்கிறது. பல நேரங்களில் இரண்டு மாடுகள் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது
இதனால் தெருக்கள் முதல் பஜார் வீதிகள் வரை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பீதியுடனே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அச்சுறுத்தும் வகையில் நடமாடும் நாய்களையும் மாடுகளையும் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.