ADDED : ஆக 13, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி அருகே ஊருக்குள் வழி தவறி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டி கடித்து குதறின.
நேற்று காலை திருச்சூழி அருகே உள்ள உடையனம்பட்டி காட்டுப் பகுதியில் இருந்து ஆண் புள்ளி மான் இரை தேடி ஊருக்குள் வந்தது. அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் மானை துரத்தி கடித்து குதறின. மானின் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்ற இளைஞர்கள் நாய்களிடமிருந்து புள்ளி மானை மீட்டு, மிரளாமல் இருக்க அவற்றின் கண்களை கட்டி திருச்சுழி போலீசார் உதவியுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வன காவலர் பிரபு காயமடைந்த புள்ளி மானை திருச்சுழி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.

