/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l அம்மா உணவகங்களில் தொடர் பிரச்னைகளை கவனிப்பாரில்லை;
/
l அம்மா உணவகங்களில் தொடர் பிரச்னைகளை கவனிப்பாரில்லை;
l அம்மா உணவகங்களில் தொடர் பிரச்னைகளை கவனிப்பாரில்லை;
l அம்மா உணவகங்களில் தொடர் பிரச்னைகளை கவனிப்பாரில்லை;
ADDED : ஆக 07, 2024 06:46 AM
கிரைண்டர் பழுதால் காலை இட்லி இல்லை
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் ஆட்சி மாற்றத்திற்கு பின் பெரிய அளவில் பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் ஒரு அம்மா உணவகத்தில் போர்டுகள் சேதப்படுத்தப்பட்ட போது, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை சரி செய்து இந்த ஆட்சியிலும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தார். அவர் கூறியது போல் அம்மா உணவகங்கள் இன்று வரை செயல்படுகிறது. ஆனால் அவற்றிற்கான பராமரிப்புகள் தான் கேள்விக்குறியாக உள்ளது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் கிரைண்டர் பழுதால் 3 மாதங்களாக இட்லி போடப்படவில்லை. காலை நேரங்களிலும் பூரி, மதியம் லெமன், தக்காளி, தயிர், சாம்பார் சாதங்கள்விற்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் கிரைண்டரை தற்போது வரை பழுது பார்க்காமல் வைத்துள்ளனர். என்ன காரணத்திற்காக புறக்கணிக்கின்றனர் என தெரியவில்லை. விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பலருக்கு இது தான் காலை, மதிய உணவாக உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.
இதே போல் ராஜபாளையம் நகராட்சியில் வேக வைக்கும் இயந்திரம் ஓராண்டாக பழுதாகி உள்ளது. இதனால் அதிகமாக ஆட்கள் வரும் போது உணவு தயாரிப்பதில் சிக்கல் உள்ளதால் மக்கள் திண்டாடும் சூழல் உள்ளது. திருத்தங்கலில் ரூ.5க்கு விற்கப்பட வேண்டிய உணவு வகைகள் ரூ.10க்கு விற்கப்படுகின்றன. மாநகராட்சி பிரிவினர் யாரும் கள ஆய்வு செய்வது கிடையாது. அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் உணவகத்திற்கு என்னென்ன தேவை உள்ளது என்பதை கேட்பது கிடையாது. பல அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித அச்சத்துடனே வேலை பார்க்கின்றனர்.
இன்னும் சில அம்மா உணவகங்களில் சுகாதார பிரச்னைகள் உள்ளன. அவற்றை சுற்றியுள்ள ஓடைகள் துார்வாரப்படாததால் உணவகங்களுக்கு உள்ளேயே துர்நாற்றம் வீசுகிறது. உணவருந்த வருவோர் கடும் சிரமத்திற்கு மத்தியில் சாப்பிடுகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. எனவே நகராட்சிகள், மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்து அவற்றில் உள்ள இயந்திரங்களை சரி செய்து முறைப்படி பராமரிக்கவும், காலை நேரங்களில் முன்பு அறிவிக்கப்பட்ட உணவுகள் அறிவிக்கப்பட்ட விலையில் கிடைப்பதையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவையாக உள்ளது.