/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை: மக்கள் திண்டாட்டம்
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை: மக்கள் திண்டாட்டம்
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை: மக்கள் திண்டாட்டம்
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை: மக்கள் திண்டாட்டம்
UPDATED : மார் 07, 2025 07:26 AM
ADDED : மார் 07, 2025 07:15 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.எஸ்.ஆர்., நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் பிளான்டில் 3 வாரமாக குடிநீர் வினியோகம் இல்லை. நேற்று குறைதீர் கூட்டத்திற்கு வந்த மக்கள் கொளுத்தும் வெயிலால் தண்ணீருக்கு திண்டாடினர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலகங்களில் குடிநீர் வசதி உள்ளது. அலுவலர்களுக்கும், திட்ட சேவை தொடர்பாக வந்து செல்லும் மக்களுக்கும் குடிநீர் பிரச்னை இல்லை. புதிய கலெக்டர் அலுவலகம் சிறிது சிறிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவுகள், டி.ஆர்.ஓ., அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இடமாற்றப்பட்டு விட்டன. 3 குறைதீர் கூட்டங்கள் அங்கு நடத்தப்பட்ட நிலையில், தற்போது பழைய கட்டடத்தில் தான் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மக்கள் பெரும்பான்மை சி.எஸ்.ஆர்., நிதியில் சிறுதானிய கடை அருகே கட்டப்பட்டுஉள்ள பிளான்டில் இருந்து தான் குடிநீரை குடிப்பர்.
இந்நிலையில் மூன்று வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லை. வெயிலோடு அலைந்து மனு அளிக்க, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வருவோர் மர நிழலில் இப்பகுதியில் தான் நிற்பர். இங்கு குடிநீர் கிடைத்ததால் முதியவர்கள், போட்டி தேர்வு பயிலும் மாணவர்கள், மனு அளிக்க வந்து செல்வோர் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் நான்கு நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். நேற்று 400க்கும் மேற்பட்ட மக்கள் மனு அளிக்க வந்தனர். இவர்களுக்கு இந்த பிளான்டில் குடிநீர் கிடைக்காததால் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.