/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அதிவேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்கள்: பதறும் வாகன ஓட்டிகள்
/
ஸ்ரீவி.,யில் அதிவேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்கள்: பதறும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீவி.,யில் அதிவேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்கள்: பதறும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீவி.,யில் அதிவேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்கள்: பதறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 20, 2024 12:13 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசு நிர்வாகம் அனுமதித்துள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டர்களை தார்ப்பாய் கொண்டு மூடாமல் அதிவேகத்தில் பறக்கும் டிராக்டர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தாசில்தார்களிடம் விண்ணப்பித்து தங்களது நில ஆவணங்களை பதிவு செய்து கண்மாய்களில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 46 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி வழங்கிய நிலையில், விவசாயிகள் போர்வையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவுடன் கடந்த சில நாட்களாக டிராக்டர்களில் மண் எடுத்து செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு செல்லும் டிராக்டர்கள் மண்ணை தார்ப்பாய் கொண்டு மூடாமலும், சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்திலும், பள்ளி மாணவர்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரத வீதிகள் வழியாகவும் டிராக்டர்கள் பறந்து செல்கிறது. இதனைக் கண்டு நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
தார்பாய் போடாமல் வேகமாக செல்லும் டிராக்டர்களை பார்த்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது.

