/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்விக்கடன் முகாம் தேதி மாற்றம்
/
கல்விக்கடன் முகாம் தேதி மாற்றம்
ADDED : செப் 13, 2024 04:42 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெய சீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து வங்கிகளின் சார்பில் செப். 13ல் நடக்கவிருந்த சிறப்பு கல்வி கடன் முகாம், நிர்வாக காரணங்களால் செப். 19 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடக்கும் நாளன்று உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லுாரி சேர்க்கைக்கான ஆணையோடு பங்கேற்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.