/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருவின் நடுவே மின்கம்பங்கள் குடியிருப்புவாசிகள் அவதி
/
தெருவின் நடுவே மின்கம்பங்கள் குடியிருப்புவாசிகள் அவதி
தெருவின் நடுவே மின்கம்பங்கள் குடியிருப்புவாசிகள் அவதி
தெருவின் நடுவே மின்கம்பங்கள் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஜூன் 19, 2024 04:52 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கி வாடன் பட்டியில் தெருவின் நடுவில் உள்ள மின் கம்பங்களால் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்வதற்கு வழியின்றி அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கி வாடன்பட்டி கிழக்குத் தெருவில் நடுவிலேயே மின் கம்பங்கள் உள்ளது. இதனால் உடல்நிலை சரி இல்லாதவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆட்டோ கூட தெருக்களில் வர முடியவில்லை.
மேலும் ஏதேனும் இறப்பு நேரிடும் போது உடலை கொண்டு செல்வதற்கும் ,கார் உள்ளிட்ட வாகனமும் செல்வதற்கு வழி இல்லை. தவிர இப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் போது பெரிய வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்வதற்கும் சிரமமாக உள்ளது.
தவிர தெருவில் ரோடும் சேதம் அடைந்து இருப்பதால் இப்பகுதியினர் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நடுரோட்டில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.