/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலையடிவார பகுதி விளை நிலத்தில் யானைகள் --விவசாயிகள் அச்சம்
/
மலையடிவார பகுதி விளை நிலத்தில் யானைகள் --விவசாயிகள் அச்சம்
மலையடிவார பகுதி விளை நிலத்தில் யானைகள் --விவசாயிகள் அச்சம்
மலையடிவார பகுதி விளை நிலத்தில் யானைகள் --விவசாயிகள் அச்சம்
ADDED : அக் 02, 2025 11:20 PM

ராஜபாளையம்; ராஜபாளையம் அணைத்தலை விநாயகர் கோயில் ஒட்டிய பகுதியில் முகாமிட்டு சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ராஜபாளையம் தென்றல் நகர் அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி அணைத்தலை விநாயகர் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் செல்லும் பாதை, அணைத்தலை ஆறு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் தென்னை, மா, வாழை, கொய்யா, பலா உள்ளிட்ட விவசாயம் நுாற்றுக்கணக்கான ஹெக்டேரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் மாத கணக்கில் காட்டுயானை கூட்டம் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக அணைத்தலை விநாயகர் கோயில் மெயின் ரோடு வரை வந்த யானை கூட்டம் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களின் குருத்துகளை பிய்த்து வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. அப்பகுதி வேலிகளை சாய்த்துள்ளதுடன், தண்ணீர் குழாய்களை உடைத்துள்ளது.
இது குறித்து விவசாயி கண்ணன்: தொடர்ந்து மலையடிவாரம், ஆற்றுப்பகுதி புதர்களில் பதுங்கி முகாமிட்டு இரவு நேரங்களில் கூட்டமாக வந்து சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.
இதன் காரணமாக இரவு நேர காவலுக்கு ஆட்கள் வர தயங்குகின்றனர். இப்பகுதியை சுற்றி ஆறு மாதங்களுக்குள் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் விவசாயிகள் பயிர்களை காக்க வழியின்றி பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் விரட்ட அரசு வழி காண வேண்டும்.