/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வடக்கு ரத வீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்
/
சாத்துார் வடக்கு ரத வீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்
சாத்துார் வடக்கு ரத வீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்
சாத்துார் வடக்கு ரத வீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2025 11:19 PM
சாத்துார்; சாத்துார் வடக்கு ரத வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாத்துார் வடக்கு ரத வீதி நகரின் பிரதான பகுதியாகும்.இங்கு திருமண மண்டபங்கள், காய்கனி மார்க்கெட், நிதி நிறுவனங்கள், ஐ.டி.கம்பெனிகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இதனால் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.மேலும் நாடார் கீழ தெரு, பாரதியார் தெரு,கீழரத வீதி மற்றும் அருந்ததியர் காலனி பகுதி மக்கள் இந்த சாலை வழியாக வந்து மெயின் ரோட்டை அடைகின்றனர்.
100 அடி அகலம் கொண்ட வடக்குத வீதி தற்போது ஆக்கிரமிப்பு கடைகளால் 40 அடி ரோடாக மாறிவிட்டது.தற்காலிகமாக அமைக்கப்பட்ட பால் பூத்,இலைக் கடை, வாழைத்தார் கடை, ஓட்டல்கள்,பேன்சி ரக கடைகள், டீ கடைகள்என பல்வேறு ஆக்கிரமிப்பு கடைகள் இந்த பகுதியில் உள்ளது.
இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.
நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதன் மூலம் மக்கள் நெரிசல் இன்றி நடமாட வசதியாக இருக்கும்.
மேலும் வாகன விபத்துகளும் குறையும். எனவே நகராட்சி நிர்வாகம் வடக்கு ரத வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.