ADDED : அக் 02, 2025 11:19 PM

விருதுநகர்; விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிகள் அம்பு எய்தும் மகர நோன்பு விழா நடந்தது. இதில் புலி வேடமிட்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்து சுவாமிக்கு வழிபாடு செய்தனர்.
விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமியான நேற்று மீனாட்சி சொக்கநாதர் சுவாமி, சந்திர சேகரராக அவதாரம் எடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு ஏய்தல் கோயில் வளாகத்தில் நடந்தது. இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட தேரில் சொக்கநாதர், சந்திரசேகரராக எழுந்தருளினார். அதன் பின் அம்பு எய்தல் நடந்தது.
மாலையில் விருதுநகர் வெயிலுகந்தம்மன், வாலசுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து கே.வி.எஸ்., பள்ளி அருகே தேவஸ்தானம் போர்டு நந்தவனத்தில் ஓன்றுகூடி அரக்கனை வதம் செய்தல் நடந்தது. புலி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.