ADDED : ஜூன் 30, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், தமிழகத்தின் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை முகாமிலேயே வழங்கப்பட்டது.
முதல்வர் உமாராணி பணி ஆணையை வழங்கினார். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர் செல்ல பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்தனர்.