/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் மீண்டும் உச்சகட்ட ஆக்கிரமிப்பு
/
அருப்புக்கோட்டையில் மீண்டும் உச்சகட்ட ஆக்கிரமிப்பு
அருப்புக்கோட்டையில் மீண்டும் உச்சகட்ட ஆக்கிரமிப்பு
அருப்புக்கோட்டையில் மீண்டும் உச்சகட்ட ஆக்கிரமிப்பு
ADDED : மார் 06, 2025 03:14 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில்2ம் கட்ட ஆக்கிரமிப்புகளைஅகற்றுவதில் அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்ததால் நகர் முழுவதும் உச்சகட்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்திற்க்கும், மக்களுக்கும் இடையூறாக இருந்தது. சமூக ஆர்வலர்கள், மக்கள், நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் டிசம்பர் 2024ல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை போலீசார் இணைந்து நகரில் ரோடு ஓர ஆக்கிரமிப்புகள், கடைகளின் சன் ஷேடுகளை மற்றும் அகற்றினர். 2, 3ம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் போது நிரந்தர ஆக்கிரமிப்புகள் 10 நாட்கள் இடைவெளியில் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் கூறினர்.
ஆனால் முதல் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பெயருக்கு அகற்றிவிட்டு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டனர். அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கவில்லை. ஏற்கனவே, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் 25 ஆயிரம் அபராதம், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் விநியோகம் செய்து கையெழுத்தும் வாங்கி உள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையில் அதிகாரிகள்இறங்கிய நிலையில் அரசியல் தலையீட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடங்கியது. ஆக்கிரமிப்பாளர்கள் கட்சி மூலமாகவும் அமைச்சரிடமும் 2 ம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறியதால் ஓட்டு வங்கியைகணக்கில் கொண்டுஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இதனால் நகரில் மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், கடைகளை ரோடு வரை நீட்டித்தும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுஉள்ளது. இதனால் தொடர்ந்து போக்குவரத்துநெரிசல் ஏற்படுவதுடன்மக்களும் அவதிப்படுகின்றனர்.
தினேஷ்பாபு, உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை: ஆர்.டி.ஓ., விடம் கலந்து ஆலோசனை செய்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க உடன்படுவதாக அவர்கள் கையெழுத்து இட்டுள்ளனர். மீண்டும் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு அபராதமும் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.
வள்ளிக்கண்ணு, ஆர்.டி.ஓ.,: முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குரிய விதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகம், 2, 3ம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி உள்ளிட்டவைகளை ஆலோசனை செய்து முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய உடன் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2, 3ம் கட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் ஆகியோர் செய்திருக்க வேண்டும். இதில் வருவாய் துறையின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை. அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து இருந்தால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்காது.