ADDED : ஜூன் 29, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் ராஜபாளையம் ரோட்டரி கிளப் கிங் சிட்டி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் இ.பி.எப்., குறைதீர்க்கும் முகாம் தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடந்தது.
ரோட்டரி கிங் சிட்டி தலைவர் வியாஸ் தலைமை வகித்தார். செயலாளர் செல்வ அழகு முன்னிலை வகித்தார்.
இ.பி.எப் அமலாக்க அதிகாரி கௌரி சங்கர் வருங்கால வைப்பு நிதி பென்ஷன் பெறுவது, திட்டத்தின் பலன்கள், வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண் வங்கி கணக்கை இணைப்பதில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அலுவலர்கள் செல்லப்பா, சின்னதுரை கேசவன், இ.எஸ்.ஐ., மேலாளர் ஹரி பிரசன்னா உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.