/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாலை நேர மழை, காற்றால் சேதமான மின்கம்பத்தால் அச்சம்
/
மாலை நேர மழை, காற்றால் சேதமான மின்கம்பத்தால் அச்சம்
மாலை நேர மழை, காற்றால் சேதமான மின்கம்பத்தால் அச்சம்
மாலை நேர மழை, காற்றால் சேதமான மின்கம்பத்தால் அச்சம்
ADDED : ஆக 06, 2024 04:38 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே கிராமத்தில்சேதமான மின்கம்பத்தால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் இன்றளவும் பல்வேறு தெருக்களில் சேதமான மின்கம்பங்கள் அதிகம் உள்ளன. இவற்றால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஜூலை மாதம் கூட வச்சக்காரப்பட்டியில் கனமழை, மாலை சூறைக்காற்றால் நான்கைந்து மின்கம்பங்கள் சேதமாகின. மீண்டும் மாவட்டத்தில் மாலை நேர மழை பெய்ய துவங்கி உள்ளது. பலத்த காற்று வீசுகிறது. இதனால் மீண்டும் கிராமப்புறங்களில் உள்ள மின்கம்பங்கள் சரிந்து சேதமாக வாய்ப்புள்ளது.
விருதுநகர் அருகே மருதநத்தம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவில் தெருவில் மின்கம்பம் சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. பலத்த காற்றடித்தால் சரிய வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது மாலை நேரங்களில் மழையும், பலத்த காற்றும் வீசுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சேதமான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நடவேண்டும்.