/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல் எறிந்து பஸ் கண்ணாடி உடைப்பு முன்னாள் போலீஸ்காரர் மீது வழக்கு
/
கல் எறிந்து பஸ் கண்ணாடி உடைப்பு முன்னாள் போலீஸ்காரர் மீது வழக்கு
கல் எறிந்து பஸ் கண்ணாடி உடைப்பு முன்னாள் போலீஸ்காரர் மீது வழக்கு
கல் எறிந்து பஸ் கண்ணாடி உடைப்பு முன்னாள் போலீஸ்காரர் மீது வழக்கு
ADDED : ஜூன் 27, 2024 06:24 AM
காரியாபட்டி, : விருதுநகரில் இருந்து நேற்று முன் தினம் மாலை காரியாபட்டிக்கு டிரைவர் ரமேஷ் 30, ஓட்டி வந்த தனியார் பஸ்சில் காரியாபட்டி ஆண்மைபெருக்கியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் மணிமாறன் ஏறி, படியில் நின்றபடி வந்தார்.
கண்டக்டர் ஆறுமுகம் டிக்கெட் எடுக்க கேட்டபோது, போலீஸ்காரர் என தெரிவித்தார். படியிலிருந்து மேலே ஏற சொன்னதற்கு மறுத்ததால் அவரை பஸ்சிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். பஸ் காரியாபட்டிக்குச் சென்று விருதுநகருக்கு திரும்பியது.
மணிமாறன் கரியனேந்தல் விலக்கு அருகே பஸ்சை மறித்து, கல்லால் எறிந்து முன்பக்க கண்ணாடியை உடைத்து, தப்பி ஓடினார். இதில் காரியாபட்டியை சேர்ந்த ராஜகுமாரி, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியலட்சுமி காயமடைந்தனர்.
மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் கடையில் தகராறு ஈடுபட்டது உட்பட இவர் மீது 5 வழக்குகள் உள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.