/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம் அகழாய்வில் கண்டெடுப்பு
/
சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம் அகழாய்வில் கண்டெடுப்பு
சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம் அகழாய்வில் கண்டெடுப்பு
சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம் அகழாய்வில் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 06, 2024 10:47 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில், சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம், கருப்பு நிற மணி, காதணி கண்டெடுக்கப்பட்டன.
விஜய கரிசல்குளத்தில், மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள், வட்டச்சில்லு, அகல்விளக்கு, எலும்புகள், தொங்கணி, செப்பு நாணயம் உள்ளிட்ட 450 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சுடு மண்ணாலான காளையின் உடல் பாகம், கருப்பு நிற மணி, காதணி நேற்று கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''ஏற்கனவே நடந்த அகழாய்விலும், சுடு மண்ணாலான திமில் உடைய காளையின் உருவங்கள் அதிக அளவில் கிடைத்தன.
''இதன் வாயிலாக, முன்னோர்கள் வீர விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது. மேலும் காதணி, தொங்கணி கிடைத்ததன் மூலம் அணிகலன்களுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளனர்,'' என்றார்.