/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளவக்கல் அணை பூங்காவிற்கு அனுமதி தர மக்கள் எதிர்பார்ப்பு
/
பிளவக்கல் அணை பூங்காவிற்கு அனுமதி தர மக்கள் எதிர்பார்ப்பு
பிளவக்கல் அணை பூங்காவிற்கு அனுமதி தர மக்கள் எதிர்பார்ப்பு
பிளவக்கல் அணை பூங்காவிற்கு அனுமதி தர மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 10, 2024 11:57 PM
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணையில், சேதமடைந்து காணப்படும் பூங்காவை சீரமைத்து மக்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்குள்ள பெரியாறு கோவிலாறு அணைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளால் மூன்று புறமும் சூழப்பட்டு ஒருபுறம் மட்டும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையாய் அமைந்த இந்த அமைப்பு தண்ணீர் நிரம்பிய நிலையில் பார்ப்பவர்களை பரவசமடையச் செய்யும்.
இத்தகைய இயற்கை அழகோடு உள்ள அணையில் மாவட்ட மக்கள் தங்களின் விடுமுறை நாட்களை அனுபவிக்க அணையை ஒட்டி பொழுது போக்கும் பூங்கா அமைக்கப்பட்டு அதில் செயற்கை நீரூற்றுகள், அழகிய சிற்பங்கள், ஊஞ்சல், பிரமிடு, சிறுவர்களுக்கான சறுக்கு, மீன் கண்காட்சி அரங்கு போன்றவை அமைக்கப்பட்டது.
கொரோனோ காலத்திற்கு முன்பு வரை மக்கள் இங்கு வந்து சென்றனர். ஆனால் அதன் பின்பு பூங்கா சீரமைக்கப்படாததால் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து அழகு இன்றி காணப்படுகிறது.
இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல இடமின்றி தவித்து வருகின்றனர்.
எனவே பிளவக்கல்பெரியாறு அணை பூங்காவை சீரமைத்து போதிய அடிப்படை வசதிகள் செய்து மக்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.